ஐ.டி ஊழியர்களின் முதுகுவலியை தீர்க்க வந்த புதுமாடல் சேர்கள்

ஐ.டி ஊழியர்களின் முதுகுவலியை தீர்க்க வந்த புதுமாடல் சேர்கள்
[carousel ids=”74503,74502,74501,74500″] பலமணி நேரங்களாக கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பணிபுரியும் ஐ.டி ஊழியர்கள் உள்பட அனைவருக்கும் ஏற்படும் பிரச்சனை முதுகுவலி. சரியான உயரத்தில் கம்ப்யூட்டர் முன் உட்கார்ந்து பணிபுரியும் வாய்ப்பு பலருக்கு இல்லாததால், அவர்களுடை உடல் மற்றும் மனநிலையில் மாறுதல் ஏற்பட்டு மன அழுத்தம் ஏற்படும் வாய்ப்பு பல ஊழியர்களுக்கு உள்ளது.

இந்த நிலையை போக்க தற்போது புதிய வகையில் படுத்துக்கொண்டே அல்லது விருப்பம் போல் சாய்ந்து கொண்டே பணிபுரியும் வகையில் சேர்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவற்றை எளிய முறையில் பலவிதமாக மாற்றிக்கொள்ளலாம். இவற்றுடன் இணைக்கப்பட்டிருக்கும் டெஸ்க்கில் லேப்டாப் அல்லது கம்ப்யூட்டரை வைத்து கொள்ளலாம். இவ்விதமான சேர்களில் உட்கார்ந்து பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முதுகுவலி உள்பட எவ்விதமான பிரச்சனையும் ஏற்படாது என்று இதன் தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

இந்த சேர்களின் மதிப்பு 5,900 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்திய மதிப்பில் சுமார் ரூ.3,72,000 ஆகும் இந்த சேர்கள் இந்தியாவிற்கு எப்போது வரும் என்பதே ஐ.டி. ஊழியர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

English Summary: $5900 Office Chair desk combination lets you lie down at work

Leave a Reply