4 ஜியை விட 10 மடங்கு வேகத்துடன் விரைவில் வருகிறது 5ஜி
தனியார் 5ஜி நெட்வொர்க்குகளை இயக்குவதற்கு வழி வகுக்கும் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.
இந்தியாவில் இணைய பயன்பாட்டாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருக்கும் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2022 ஜூலை மாதத்தில் நடத்தவும், 5ஜி சேவைக்கான வர்த்தக வெளியீடு சுத்ந்திர தினத்தன்று நடத்தவும் திட்டமிடப்பட்டு இருந்தது.
5ஜி அலைக்கற்றை 20 ஆண்டுக்கு ஏலம் விடப்பட உள்ளது. வளர்ச்சி மற்றும் புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில் தனியார் கேப்டிவ் நெட்வொர்க்குகளை அமைக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
விரைவில் வெளியிடப்பட உள்ள 5ஜி சேவை தற்போது நடைமுறையில் இருக்கும் 4ஜியின் கீழ் வழங்குவதை விட 10 மடங்கு வேகமாக இருக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.