அடுத்த ஆண்டு தான் 5ஜி சேவை: அமைச்சரின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அடுத்த ஆண்டு தான் 5ஜி சேவை: அமைச்சரின் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!

அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஆண்டுதான் 5ஜி சேவை கிடைக்கும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளது பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏர்டெல் ஜியோ ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை தற்போது வழங்கி வரும் நிலையில் பிஎஸ்என்எல் இன்னும் 3ஜி சேவை மட்டுமே வழங்கி வருகிறது

இந்த நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் 4ஜி சேவை வழங்கப்படும் என்றும் அதே போல் அடுத்த ஆண்டு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவை வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் அவர்கள் தெரிவித்துள்ளார் அவருடைய இந்த அறிவிப்பு பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.