6ஐ 12ஆக மாற்ற வேண்டுமா? ஐ.ஆர்.சி.டி.சி புதிய நிபந்தனை

6ஐ 12ஆக மாற்ற வேண்டுமா? ஐ.ஆர்.சி.டி.சி புதிய நிபந்தனை

ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தற்போது மாதம் ஒன்றுக்கு 6 முறை மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்ற நிலை உள்ளது. இந்த 6ஐ 12ஆக மாற்ற வேண்டும் என்றால் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைக்க வேண்டும் என்றும் இதன் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’ மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

தெற்கு ரெயில்வே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதில் புதிய நடைமுறையை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன்படி ஐ.ஆர்.சி.டி.சி.-யில் தங்களது செல்போன் எண் மற்றும் ஆதார் எண் ஆகியவற்றை இணைப்பதின் மூலம், இனி மாதத்துக்கு 12 முறை ‘ஆன்-லைன்’ மூலம் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். மேலும் முன்பதிவு கோரும் பயணிகள் விவர பட்டியலில் இடம்பெறும் ஒருவரின் ஆதார் எண்ணும் குறிப்பிட்டிருக்க வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply