6 ஆயிரம் ஊழியர்களை நீக்க காக்னிஸெண்ட் முடிவு

6 ஆயிரம் ஊழியர்களை நீக்க காக்னிஸெண்ட் முடிவு

தகவல் தொழில்நுட்ப துறையில் முன்னணி நிறுவனமான காக்னி ஸெண்ட் டெக்னாலஜி சொல்யூ ஷன்ஸ் (சிடிஎஸ்), 6,000 பணி யாளர்களை வேலையிலிருந்து நீக்க முடிவு செய்துள்ளது. நாஸ்டாக் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவன மான காக்னிஸெண்ட்டில் 2016 டிசம்பர் 31ம் தேதி வரையில் 2.6 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். இதில் தற்போது நீக்கப்பட உள்ள பணியாளர்கள் 2 சதவீதமாகும்.

இது தொடர்பாக அந்த நிறுவனத் தின் செய்தி தொடர்பாளர் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படாத பணியாளர் களை பணி நீக்கம் செய்வது வழக்கமான நடவடிக்கைதான் என்று கூறியுள்ளார். இது தவிர பல்வேறு சலுகைகளையும் காக்னிஸெண்ட் குறைத்துள்ளது.

பணியாளர்களின் பணி செயல் பாடுகளை தொடர்ச்சியாக மதிப்பீடு செய்வதன் மூலம் சரியான பணி யாளர்களை அடையாளம் காண்கி றோம். வாடிக்கையாளர்களின் தேவைகளை நிறைவேற்ற திறமை யான பணியாளர்கள்தான் தேவை. இதன் மூலம் எங்களது இலக்கு களையும் அடைய முடியும். இந்த நடவடிக்கை நிர்வாக உத்திகளில் ஒன்றுதான் என்றும் கூறினார்.

பல்வேறு வகையான ஊதிய ஏற்றத்தாழ்வுகள் குறித்த கேள்விக்கு, காக்னிஸெண்ட் திறமையான செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட கலா சாரத்தை ஊக்குவிக்கிறது. ஒவ் வொரு தனிநபரும் வெளிப்படுத் தும் திறமையின் அடிப்படையில் நிறுவனம் ஊதியத்தை நிர்ணயிக் கிறது. கடந்த ஆண்டில் எங்களது இலக்கில் மிகச் சிறப்பாக செயல்பட்டோம். அதற்கேற்ப இலக்கு வைக்கப்பட்ட ஊதியத்தை வழங்கியது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டில் எங்களது இலக்கை தவறவிட்டோம். அதற்கேற்ப ஊதிய விகிதமும் எதிரொலிக்கிறது என்றார்.

ஐடி நிறுவனங்களில் கடை நிலை பணியிடங்களில் தேவைக் கதிகமான ஊழியர்கள் இருப்பதால் அவர்களை பணிநீக்கம் செய்வது அதிகரிக்கும் என வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். பல ஐடி நிறுவனங்கள் குறைவான வளர்ச்சி யையே கண்டு வருகின்றன.

காக்னிஸெண்ட் நிறுவனம் அடுத்த 2 ஆண்டுகளில் தங்களது பங்குதாரர்களிடமிருந்து பங்கு களை திரும்ப வாங்கவும், டிவி டெண்ட் அளிக்கவும் 3.4 பில்லியன் டாலர் ஒதுக்குவதாக முன்னதாக அறிவித்திருந்தது.

Leave a Reply