6 நாள் குழந்தைக்கு இதயமாற்று அறுவைச்சிகிச்சை. அமெரிக்க மருத்துவர்கள் சாதனை

babyபிறக்கும்போதே இதயக்கோளாறுடன் பிறந்த ஒரு குழந்தைக்கு பிறந்து ஆறே நாளில் இதயமாற்று அறுவை சிகிச்சை செய்து அமெரிக்க டாக்டர்கள் சாதனை புரிந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தை சேர்ந்த ஒலிவர் கிராபோர்ட் என்ற குழந்தைக்கு இதயக்கோளாறு இருப்பதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர். அந்த குழந்தையின் இருதயத்தில், “வென்ட்ரிகல்’ எனப்படும் இடது கீழறை, வழக்கமான அளவை விட பெரிதாக இருந்ததை, அது தாயின் வயிற்றிலிருந்த 24-ஆவது வாரத்திலேயே மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்நிலையில் இந்த குழந்தை 7 வாரங்களுக்கு முன்பே பிறந்துவிட்டது. பிறந்த ஆறாவது நாளில் அந்த குழந்தைக்கு இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

அந்த குழந்தையின் அதிர்ஷ்டத்தால் அதற்கு பொருத்தமான இதயமும் கிடைத்ததால், உடனடியாக குறைபாடுள்ள இருதயம் அகற்றப்பட்டு, தானமாகப் பெறப்பட்ட மாற்று இருதயம் பொருத்தப்பட்டது. தற்போது அந்தக் குழந்தை 2.8 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply