ரஷ்யாவில் சக்தி வாய்ந்த பூகம்பம். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?

ரஷ்யாவில் சக்தி வாய்ந்த பூகம்பம். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதா?
RussiaEarthquake
அமெரிக்காவையும், ரஷியாவையும் பிரிக்கும் பெரிங் கடல்பகுதியை ஒட்டியுள்ள ம்சாட்கா தீபகற்ப தீவுகளில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த பூகம்பம் தாக்கியதால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்ட்ள்ளது. சுமார் மூன்று லட்சம் மக்கள் வசித்து வரும் இந்த பகுதியில் என்ன பாதிப்பு என இதுவரை தகவல்கள் வெளிவரவில்லை

ரிக்டர் அளவில் 6.6 என பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என புவியியல் அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எனவே இந்த பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடப்படவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ம்சாட்சா தீபகற்ப பகுதியில் உள்ள கமாண்டர் தீவுகளுக்கு தென்மேற்கே 146 மைல் தூரத்தில் இந்த கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் 40 மைல் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அந்த பகுதியின் பல கட்டிடங்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

Chennai Today News: 6.6-Magnitude Quake Hits Off Russia’s Far Eastern Coast

Leave a Reply