அரசு ஊழியர்களின் சம்பளம் பிடித்தம்

 ஐகோர்ட் உத்தரவால் அவசர சட்டம் இயற்றிய முதல்வர்

கொரோனா நிவாரண நிதிக்காக கேரள அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியத்தை பிடித்தம் செய்யவிருப்பதாக கேரள அரசு அறிவித்த நிலையில் இந்த அறிவிப்புக்கு கேரள ஐகோர்ட் தடை விதித்தது.

இதனையடுத்து நேற்று கூடிய கேரள அமைச்சரவை ஏப்ரல் முதல் அடுத்த 5 மாதங்களுக்கு, அரசு ஊழியர்களின் 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்வதற்கான அவசர சட்டம் தொடர்பான தீர்மானம் ஒன்றை சட்டசபையில் நிறைவேற்றியது.

இந்த தீர்மானம் கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கவர்னர் ஒப்புதல் கொடுத்தவுடன் ஏப்ரல் மாதத்தில் இருந்து 6 நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கேரள அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன. இதனால் அரசு ஊழியர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Leave a Reply