டெல்லி மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேர் பலி: அதிர்ச்சி தகவல்
டெல்லி மத வழிபாட்டு நிகழ்ச்சியில் தமிழ்நாட்டை சேர்ந்த 1500 பேர் உள்பட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றதாக கூறப்பட்டது. ஆனால் தமிழகத்தில் இருந்து யாரும் அந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என்ற மறுப்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலைய்ல் டெல்லி மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற 6 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பலியாகியுள்ளனர். இவர்கள் ஆறு பேர்களும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது
உயிரிழந்த ஆறு பேரும் டெல்லியில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் இதனால் தெலுங்கானா மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது