விருதுகளை திரும்ப ஒப்படைத்தது ஏன்? ஆறு கர்நாடக எழுத்தாளர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

விருதுகளை திரும்ப ஒப்படைத்தது ஏன்? ஆறு கர்நாடக எழுத்தாளர்கள் ஏற்படுத்திய பரபரப்பு

writerபிரபல கர்நாடக எழுத்தாளர் கல்பார்கி கடந்த ஆகஸ்ட் மாதம் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். ஒரு குறிப்பிட்ட மதத்தை அவர் கடுமையாக தாக்கி எழுதியதால் கொல்லபட்டதாக கூறப்படுகிறது. கொலையாளிகளை கர்நாடக போலீசார் வலைவீசி தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் நிலையில், இன்னும் கொலையாளிகள் பிடிபடாதது அம்மாநிலத்தின் பிற எழுத்தாளர்களை கோபம் அடைய செய்துள்ளது.

இதனால் கர்நாடக மாநிலத்தின் ஆறு முன்னணி எழுத்தாளர்கள் தங்களுடைய விருதுகளை கர்நாடக அரசிடம் திரும்ப ஒப்படைத்துள்ளனர். கல்பார்கியை கொலை செய்தவர்களை பிடிப்பதில் போலீஸார் மெத்தனம் காட்டி வருவதாகவும் இதன் காரணமாக தங்கள் விருதுகளை திரும்ப ஒப்படைத்துள்ளதாக கூறிய எழுத்தாளர்கள், வரும் நவம்பருக்குள் கொலையாளிகளை பிடித்துவிட்டால் மீண்டும் விருதுகளை பெற்றுக்கொள்ள தயார் என அறிவித்துள்ளனர்.

கொலையாளிகளை பிடிக்க ரூ.5 லட்சம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவர்களை பிடித்துவிடுவோம் என்று கர்நாடக போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply