சிரிப்பு, கோபம் என 6 உணர்வுகளுடன் ‘லைக்’ பட்டன்கள்: ஃபேஸ்புக் அறிமுகம்

Facebook_2713758f_2714123f

கோபம், வருத்தம், ஆச்சரியம், சிரிப்பு, அழைப்பு, அன்பு உள்ளிட்ட ஆறு புதிய உணர்ச்சிகள், ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைய உள்ளன.

மக்களின் உணர்ச்சிகளை சிறந்த முறையில் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதாலேயே, ஃபேஸ்புக் 160 கோடி மக்களைப் பெற்று, உலகத்தின் மிகப்பெரிய சமூக ஊடகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது.

அமெரிக்காவுக்கு வெளியே நடந்த 4 மாதப் பரிசோதனைக்குப் பிறகு, ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க், ஆறு புதிய உணர்ச்சிகள் ஃபேஸ்புக்கில் லைக் பொத்தானோடு இணைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

கடந்த புதன்கிழமை ஃபேஸ்புக்கின் காலாண்டு வருமான அறிக்கையை வெளியிட்ட மார்க், இந்த தகவலை அறிவித்திருக்கிறார். ஆனால் எப்போது இம்முயற்சிகள் அறிமுகப்படுத்தப்படும் என்ற தகவல் அதில் வெளியிடப்படவில்லை.

இதுகுறித்து மார்க், “ஃபேஸ்புக்கின் பிரத்தியேக அடையாளமான கையை உயர்த்தும் சின்னம், லைக் பொத்தானாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது.

ஒரு விஷயத்தை மக்கள் பார்க்கும்போது, உணர்ச்சிகளை வெளிப்படுத்த லைக் பொத்தான் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. மக்கள் அனைத்து விதமான உணர்வுகளையும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இதன் மூலம் மக்கள் இப்போது இருப்பதை விட, இன்னும் அதிக நேரம் உணர்வுப்பூர்வமாக சமூக ஊடகங்களில் செலவிடுவார்கள் என்று நம்புகிறோம். உலகம் முழுக்க இவற்றை அறிமுகப்படுத்தும் முன், எங்கள் பொறியாளார்கள் மேலும் சில உணர்ச்சிகளை உருவாக்க வேண்டும்” என்று பேசினார்.

உணர்ச்சிகள் அடங்கிய ஃபேஸ்புக்கின் புது முயற்சிகள் சிலி, பிலிப்பைன்ஸ், போர்ச்சுகல், அயர்லாந்து, ஸ்பெயின், ஜப்பான், கொலம்பியா ஆகிய நாடுகளில் பரிசோதிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply