ஞாயிறு வரை பள்ளி விடுமுறை: அதிரடி அறிவிப்பு

பல்லடம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த பள்ளிக்கு ஞாயிறு வரை பள்ளி விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கொரொனாவால் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் 6 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

6 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து வரும் ஞாயிறு வரை அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.