இன்னும் ரிலீசே ஆகவில்லை. அதற்குள் 6000 டவுன்லோடா?
இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‘பாகுபலி 2’ திரைப்படம் இன்று முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. பைனான்ஸ் பிரச்சனை காரணமாக தமிழகத்தில் இந்த படத்தின் காலைக்காட்சி ரத்து செய்யப்பட்ட நிலையில் தற்போது பிரச்சனைகள் முடிவடைந்து இன்று காலை 9 மணி முதல் 11 மணி முதல் முதல் காட்சி தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இன்னும் சில மணி நேரத்தில் முதல் விமர்சனம் வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் முதல் காட்சியே இன்னும் முடியவில்லை அதற்குள் இந்த படம் இணையத்தில் வெளிவந்து சுமார் 6000 டவுன்லோடு முடிந்துவிட்டதாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இதனால் படக்குழுவினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுவரை இணையத்தில் வெளியான ‘பாகுபலி 2’ படத்தை, சுமார் 6000 பேர் டவுன்லோடு செய்துள்ளதாகவும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதால் இதனை தடுப்பதற்கு படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இணையத்தில் வெளியான லிங்குகளை முடக்க சைபர் க்ரைம் உதவியுடன் பாகுபலி படக்குழுக்குழுவினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே, பாகுபலி 2 படத்தின் சில காட்சிகள் இணையதளத்தில் லீக் ஆனது குறிப்பிடத்தக்கது.