நடுவானில் விமானம் பறந்தபோது 60 குழந்தைகளுக்கு வந்த திடீர் ஆபத்து. லண்டனில் பரபரப்பு.

  [carousel ids=”33128,33127,33126″]

தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டுவிட்டு துபாயில் இருந்து விமானத்தில் லண்டனுக்கு திரும்பிக்கொண்டிருந்த 60 பள்ளிக்குழந்தைகளுக்கு நடுவானில் திடீரென வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

பிரிட்டனை சேர்ந்த 60 குழந்தைகள், தென்னாப்பிரிக்காவில் நடந்த ஒரு கலைநிகழ்ச்சியில் கலந்துகொண்டு முடிந்த பின்னர் துபாய் வழியாக லண்டனுக்கு விமானத்தில் திரும்பிக்கொண்டிருந்தனர். இன்று காலை விமானம் துபாயில் இருந்து லண்டனுக்கு பறந்துகொண்டிருந்தபோது, திடீரென பள்ளிக்குழந்தைகள் 60 பேர்களுக்கு திடீர் வாந்தி மயக்கம் மற்றும் வயிற்று போக்கு ஏற்பட்டது. இதனால் விமான ஊழியர்கள் பெரும் பரபரப்பு அடைந்தனர்.

உடனடியாக லண்டனை நெருங்கிவிட்டதால் லண்டனிலேயே விமானத்தை இறக்க விமான கேப்டன் முடிவு செய்தார். பள்ளி குழந்தைகளுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. லண்டன் விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், தயார் நிலையில் ஆறு ஆம்புலன்ஸ்கள் லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

விமானம் தரையிறங்கியதும் உடனடியாக பள்ளிக்குழந்தைகள் அனைவரும் ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டனர். குழந்தைகள் அனைவரும் 10 முதல் 14 வயதுக்குள் இருந்ததாகவும், துபாய் விமான நிலையத்தில் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாததால் குழந்தைகள் பாதிக்கப்பட்டதாகவும் கண்டறியப்பட்டது. தற்போது குழந்தைகள் அனைவரும் நலமாக இருப்பதாக லண்டனில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

15

Leave a Reply