61 இந்திய மீனவர்கள் கைது. பாகிஸ்தான் கடற்படையினர் அட்டூழியம்.

pakistan armyஎல்லை தாண்டி மீன் பிடித்ததாக குற்றம் சாட்டப்பட்டு இந்திய மீனவர்கள் 61 பேர்களை  பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் எல்லைக்குள் 11 படகுகளில் மீன் பிடிக்க முயன்றதாக குற்றம்சாட்டி 61 மீனவர்களையும் கைது செய்துள்ள பாகிஸ்தான் கடற்படை அவர்களுடைய படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மீது வெளிநாட்டவர் மற்றும் மீன்பிடி சட்டப்பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கராச்சியில் உள்ள டாக் என்ற பகுதியில் காவல்நிலையத்தில் வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்களும், மீனவர் சங்க பிரதிநிதிகளும் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

Leave a Reply