ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்

ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்ற 65 வயது பெண்

[carousel ids=”70173,70174,70175,70176,70177,70178″]

40 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கே ஒரு குழந்தையை பிரசவிப்பது என்பது ஒரு கடினமான விஷயம் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கும் நிலையில் பெர்லினை சேர்ந்த 65 வயதான ஒரு பெண் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பிரசவித்து சாதனை செய்துள்ளார். பெர்லின் நகரை சேர்ந்த இந்த பெண்ணுக்கு ஏற்கனவே 13 குழந்தைகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

பெர்லினை சேர்ந்த 65 வயது ஓய்வு பெற்ற டீச்சர் அன்னிகிரிட் ரானிக் என்பவர் உலகின் மிக வயதான ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகள் பெற்ற பெண் என்ற சாதனையை செய்துள்ளார். ஏற்கனவே இவருக்கு 13 குழந்தைகள் இருந்த நிலையில் மீண்டும் கர்ப்பமான அன்னிகிரிட் ரானிக் சமீபத்தில் நான்கு குழந்தைகளை ஒரே பிரசவத்தில் எவ்வித பிரச்சனையும் இன்றி பெற்றுள்ளார். இவருடைய 13 குழந்தைகளுக்கு ஐந்து வெவ்வேறு தகப்பன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நான்கு குழந்தைகளும் நல்ல உடல் எடையுடன் இருப்பதாகவும், இருப்பினும் அவர்கள் மருத்துவர்களின் கண்காணிப்பில் 24 மணி நேரமும் இருப்பதாகவும், நான்கு குழந்தைகளும் எவ்வித பிரச்சனையும் இன்றி நலமாக இருப்பதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன

Leave a Reply