652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியல் வெளியீடு

computer-job-largeதமிழகம் முழுவதும் 652 கணினி பயிற்றுநர்களுக்கான தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவின்படி, மாநில வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் 652 கணினி பயிற்றுநர்கள் நியமனம் செய்யப்படுகின்றனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரை வேலூர், விழுப்புரம், சேலம், மதுரை ஆகிய 4 இடங்களில் நடைபெற்றது. இந்தச் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு, இடஒதுக்கீடு அடிப்படையில் இப்போது தேர்வுப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.

இந்தத் தேர்வுப் பட்டியலானது சென்னை உயர் நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளைகளில் நடைபெற்று வரும் வழக்குகளின் முடிவுகளுக்குக் கட்டுப்பட்டது எனவும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இவர்களுக்கான பணி நியமனம் தொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை தனியாக வெளியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply