1980-ஆம் வருட நடிகர்-நடிகைகளின் மலரும் நினைவுகள்
[carousel ids=”70881,70882,70883,70884,70885,70886,70887,70888,70889,70890,70891,70892″]
1980ஆம் ஆண்டுகளில் பிரபலமாக இருந்த தென்னிந்திய நடிகர், நடிகைகள் ஓவ்வொரு வருடமும் சந்தித்து தங்கள் மலரும் நினைவை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்வது வழக்கமாக இருந்து வருகிறது. கடந்த ஐந்து வருடங்களாக இந்த சந்திப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது ஆறாவது வருடமான இவ்வருடமும் இந்த உணர்ச்சிகரமான சந்திப்பு நடைபெற்றது.
இந்த சந்திப்பில் சுஹாசினி, குஷ்பு, மோகன்லால்,ஜெயசுதா, சரிதா, ரகுமான், ஷோபனா,மோகன், வெங்கடேஷ், பிரபு, சத்யராஜ், பாக்யராஜ், பூர்ணிமா பாக்யராஜ், சுமன், சிரஞ்சீவி, ஜெயராம், ராதா, அம்பிகா, உள்பட பலர் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வருடமும் மிக ஆர்வமாக கலந்து கொள்ளும் ரஜினிகாந்த் இவ்வருடம் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர்களும், நடிகைகளும் ஆட்டம், பாட்டு, விருந்து என நேற்றை ஒருநாளை மிகுந்த சந்தோஷத்துடன் கழித்ததாகவும், இந்த நாளை தங்களால் இன்னும் ஒரு வருடத்திற்கு மறக்க முடியாது என்றும் கூறியுள்ளனர்.