7 பேர் விடுதலை: ஆளுனர் அலுவலகம் முக்கிய தகவல்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையாளிகள் 7 பேர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை தீர்மானம் இயற்றி அந்த தீர்மானம் ஆளுனருக்கு அனுப்பப்பட்டிருக்கும் நிலையில் ஆளுனர் இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை அனுப்பியதாக தகவல் வந்தது.
ஆனால் இதனை ஆளுனர் அலுவலகம் மறுத்துள்ளது. ‘7 பேர் விடுதலை தொடர்பாக மத்திய உள்துறைக்கு ஆளுநர் பரிந்துரை எதுவும் அனுப்பவில்லை என்று விளக்கம் அளித்துள்ள ஆளுநர் மாளிகை, அமைச்சரவை பரிந்துரை தொடர்பான நீதிமன்ற கோப்புகள் நேற்று தான் கிடைத்ததாகவும், இதுகுறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.