7 பேர் விடுதலை: தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிராகரிப்பார்: சுப்பிரமணியன் சுவாமி

7 பேர் விடுதலை: தமிழக அரசின் தீர்மானத்தை கவர்னர் நிராகரிப்பார்: சுப்பிரமணியன் சுவாமி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அமைச்சரவையின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் என்று சுப்பிரமணிய சாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கூறிய பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, ‘இது தமிழக அரசின் பரிந்துரை மட்டுமே. இது தமிழ்நாடு கவர்னரை நிர்பந்திக்காது. தனது சொந்த விருப்பத்தின்படி முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் உண்டு.

ராஜீவ் காந்தி கொலை தொடர்பான ஆவணங்களை அவர் ஆய்வு செய்து, தமிழக அரசின் கோரிக்கையை கவர்னர் நிராகரிப்பார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply