ஆந்திரா ஏரியில் 7 தமிழர்களின் பிணம்: செம்மரம் கடத்தியவர்களா?
ஆந்திராவில் உள்ள ஏரி ஒன்றில்ல் இறந்த நிலையில் 7 தமிழர்களின் உடல் மீட்கப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களாகவே ஆந்திரா மாநிலத்தில் செம்மரக் கடத்தலில் தமிழர்கள் ஈடுபடுவதாக ஆந்திர மாநில அரசு குற்றம் சாட்டி வருகிறது. அவ்வப்போது தமிழர்களை பிடித்து சிறையிலும் அடைத்து வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் செம்மகரக்கடத்தலில் ஈடுபட்டதாக 7 தமிழக்ர்களை பிடிக்க ஆந்திர போலீசார் முயற்சித்தனர். ஆனால் அவர்கள் தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் தப்பிச்சென்ற 7 பேரையும் பிடிக்க அவர்களை துறத்திச் சென்ற போது, கடப்பா மாவட்டத்தில் உள்ள ஒண்டிமிட்டா ஏரியில் 7 பேரும் தவறி விழுந்துள்ளதாகவும், இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஏரியில் மூழ்கிய 7 பேரின் உடல்களை கைப்பற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து நடந்த முதல்கட்ட விசாரணையில், ஏரியில் மூழ்கி உயிரிழந்த 7 பேரும் தமிழகத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் என்பது தெரியவந்துள்ளது.
மேலும், இந்த 7 தமிழர்களும், ஆந்திராவிற்கு செம்மரம் வெட்டுவதற்காக சென்றிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்த நிலையில், மீட்கப்பட்ட 7 தொழிலாளர்களுக்கும் தங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று ஆந்திரா போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது, இது குறித்து விசாரணை நடந்துவருவதாக அவர்கள் கூறியுள்ளனர்.