சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடித்து அபார வெற்றி பெற்றார் டொனால்ட் டிரம்ப்
வரும் ஜனவரி 20ஆம் தேதி இவர் அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ளார்.
இந்நிலையில் பதவியேற்ப விழா முடிந்ததும் அன்றைய தினம் இரவு சிறப்பு டின்னர் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த டின்னரில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு புதிய அதிபருடன் உட்கார்ந்து டின்னர் சாப்பிடலாம். ஆனால் இதற்கு கட்டணம் ரூ.7 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை ரூ.7 கோடி கட்டணம் செலுத்தி மூன்று தொழிலதிபர்கள் முன்பதிவு செய்துள்ளனர். விரைவில் இன்னும் பலர் முன்பதிவு செய்யவுள்ளனர்
கடந்த 2012ஆம் ஆண்டு ஒபாமா பதவியேற்றபோது டின்னர் வசூல் மட்டும் ரூ.300 கோடி வந்ததாகவும், இம்முறை அதைவிட இருமடங்கு வசூலாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Chennai Today News: 7 crore rupees fee for to eat with usa president trump