பூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு: உயிரினங்கள் வசிக்கும் சூழல் இருப்பதாக தகவல்

பூமியை போன்ற 7 கிரகங்கள் கண்டுபிடிப்பு: உயிரினங்கள் வசிக்கும் சூழல் இருப்பதாக தகவல்

மனிதர்கள் உள்பட உயிரினங்கள் வாழ்வதற்கு தகுதிபடைத்த 7 புதிய கிரகங்களை நாசா விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை புரிந்துள்ளனர்.

பூமியின் அளவைபோலவே கிட்டத்தட்ட உள்ள இந்த கிரகங்கள் பூமியிலிருந்து 40 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. இந்த 7 கிரகங்களும் நட்சத்திரத்தை சுற்றி வருவதை நாசாவின் ஸ்பைட்செர் தொலைநோக்கி மூலம்  விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர்.

இந்த நட்சத்திரக் குடும்பத்துக்கு ட்ராப்பிஸ்ட் – 1 (TRAPPIST-1) என நாசா பெயர் சூட்டியுளது. இந்த கிரகங்களின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கு அதிகளவு சாத்தியக்கூறு இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். அதனால் இந்த கிரகங்களில் மனிதர்கள் உள்பட உயிரினங்கள் ஏற்கனவே வாழ்து கொண்டிருக்கவும் வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.

எனினும் அந்த கிரகங்களில் நிலவும் சுற்றுச்சூழலை ஆய்வு செய்த பின்னரே அங்கு உயிரினங்கள் வாழ்கின்றனவா என்பதை உறுதியுடன் தெரிவிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

மேலும் இந்த கிரகங்களில் உயிரினங்களுக்கு தேவையான் மீத்தேன், தண்ணீர், ஓசோன் ஆகிய ரசாயனங்கள் இருக்கிறதா? என்று ஆய்வு நடத்த சில ஆண்டுகள் ஆகலாம் என்றும் இந்த கிரகங்களில் பூமியைப் போன்றே பாறைகளும் இருப்பதையும் நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

Leave a Reply