எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டது அப்துல்கலாம் வெண்கல சிலை. பொதுமக்கள் மரியாதை.

எதிர்ப்பை மீறி திறக்கப்பட்டது அப்துல்கலாம் வெண்கல சிலை. பொதுமக்கள் மரியாதை.

abdul kalamமுன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் சரியாக கடந்த ஆண்டு இதே தினத்தில்தான் நம்மை விட்டு மறைந்தார்.அவரது முதலாவது நினைவுதினத்தை முன்னிட்டு இன்று அவரது உடல் புதைக்கப்பட்ட பேய்க்கரும்பு என்ற இடத்தில் 7 அடி உயர வெண்கல சிலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இஸ்லாம் மதத்தின்படி சிலை வைக்க கூடாது என்று ஒருசில அமைப்புகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. இருப்பினும் எதிர்ப்பை மீறி இன்று எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சிலை திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மத்திய அமைச்சர்கள் வெங்கய்ய நாயுடு, மனோகர் பாரிக்கர் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர் மணிகண்டன், அப்துல் கலாமின் மூத்த சகோதரர் முத்து முகமது மீரான் மரைக்காயர் மற்றும் அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். மேலும் மத்திய இணை அமைச்சர் சுபாஷ் ராமாராவ், எம்.பி. அன்வர் ராஜா, தமிழக அமைச்சர் நிலோஃபர் கபீல், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன், தமிழ்நாடு மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

அப்துல்கலாமுக்கு சிலை வைக்க கூடாது. ஜமாத்துல் உலாமா அமைப்பு எதிர்ப்பு

இந்தியாவுக்கு வெளியே அப்துல்கலாமின் முதல் சிலை. இலங்கை வடமாகாண முதல்வர் திறந்து வைத்தார்.

Leave a Reply