கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவனுக்கு மரணதண்டனை. ஐ.எஸ். இயக்கத்தினரின் கொடூரம்

கால்பந்து விளையாடிய 7 வயது சிறுவனுக்கு மரணதண்டனை. ஐ.எஸ். இயக்கத்தினரின் கொடூரம்
isisi
சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு அந்நாடுகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்து வரும் ஐ.எஸ் இயக்கம் சமீபத்தில் கால்பந்து விளையாடிய ஏழு வயது சிறுவனுக்கு மரண தண்டனை அளித்து அந்த சிறுவனை பொதுமக்கள் முன்னிலையில் சுட்டு கொலை செய்துள்ளனர். இந்த மிருகத்தனமாக செயலுக்கு உலகத்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

சிரியாவில் உள்ள ராக்கா என்ற நகரை சேர்ந்த முயாஷ் ஹசன் என்ற சிறுவன் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்தபோது மதத்துக்கு எதிரான செயல்களில் அந்த சிறுவன் ஈடுபட்டதாக அவனை கைது செய்தனர் ஐ.எஸ். இயக்கத்தினர்.

பின்னர் ஐ.எஸ்.இயக்கத்தின் நீதிபதி அந்த சிறுவனின் குற்றத்தை விசாரித்து அவனுக்கு மரண தண்டனை கொடுத்தார். பெற்றோர் மற்றும் பொது மக்கள் முன்னிலையில் ஈவு இறக்கமின்றி அந்த சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். சிறுவனின் மரணத்தை நேரில் பார்த்த அவரது பெற்றோர்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கரைக்கும் வகையில் இருந்ததாக கூறப்படுகிறது.

Leave a Reply