70% அமெரிக்கர்களின் வேலை பறிபோகிறது! ஏன் தெரியுமா?

70% அமெரிக்கர்களின் வேலை பறிபோகிறது! ஏன் தெரியுமா?

அமெரிக்காவில் ஏற்கனவே வேலையில்லா திண்டாட்டம் அதிகம் உள்ள நிலையில் தற்போது வேலை பார்த்து கொண்டிருக்கும் ஊழியர்கள் 70% பேர் விரைவில் வீட்டுக்கு அனுப்பப்பட வாய்ப்பு இருப்பதாக திடுக்கிடும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் தற்போது ரோபோக்களின் உபயோகம் அதிகமாகிவிட்டதாகவும், ஒரு ரோபோட் பல ஊழியர்களின் வேலையை மிக எளிதில் குறைந்த நேரத்தில் செலவில்லாமல் செய்வதால் பலர் தற்போது ரோபோவை வாங்கி வேலை செய்ய வைப்பதால் ஊழியர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சர்வே ஒன்று கூறுகிறது.

குறிப்பாக ஃபாஸ்ட்புட் உணவகத்தில், இன்சூரன்ஸ் அலுவலகத்தில் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு இனிமேல் வேலைக்கு ஆள் எடுக்க வாய்ப்பில்லை என்றும் இந்த வேலைகளை செவ்வனே ரோபோக்கள் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும் டிரைவர் இல்லாத கார்களின் உபயோகம் இனி அதிகளவில் வர வாய்ப்பு இருப்பதால் டிரைவர்களின் வேலைகளுக்கு ஆப்பு வைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்னும் ஒருசில ஆண்டுகளில் 70% அமெரிக்கர்களின் வேலை பறிபோகும் என்றும் புதிய வேலைவாய்ப்புகளுக்கு இடமிருக்காது என்றும் சர்வே கூறுகிறது.

Leave a Reply