பீகார்: மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் கைதான 70 குடிகாரர்கள்

பீகார்: மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் கைதான  70 குடிகாரர்கள்

Wineபீகார் மாநிலத்தில் சமீபத்தில் முழு அளவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டுவிட்டதால் குடிப்பழக்கத்தை விட முடியாத சில குடிகாரர்கள் அண்டை மாநிலங்களுக்கு சென்றும், நேபாள நாட்டின் எல்லையில் உள்ள மதுக்கடைகளுக்கு சென்றும் மதுவை குடித்து வருகின்றனர்.

இதனால் பீகாரின் எல்லையில் உள்ள மாநிலங்களில் மற்றும் நேபாளத்தில் மதுவிற்பனை வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இந்நிலையில்  பீகாரின் சிதாமாரி மாவட்ட எல்லையோரம் அமைந்துள்ள நேபாள நாட்டின் ரவுட்டஹாட் மாவட்டத்துக்குள் நுழைந்து குடித்துவிட்டு, கும்மாளம் போட்ட 70 பேரை நேபாள போலீசார் கைது செய்துள்ளனர். ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் இனி நேபாளத்துக்குள் நுழைய மாட்டோம் என்ற வாக்குறுதியையும் எழுதி வாங்கிய பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டும் குடிகாரர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் இந்த மதுவிலக்கால் அண்டை மாநிலங்களின் மதுவிற்பனை அதிகரித்ததுதான் மிச்சம் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply