70 சதவீதம் வரி
நேற்று முன் தினம் முதல் இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் மது கடைகள் திறக்கப்பட்டுள்ளன என்பதும் தமிழகத்தில் நாளை முதல் அதாவது மே 7-ஆம் தேதி முதல் மது கடைகள் சென்னை தவிர பிற பகுதிகளில் திறக்கப்பட உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் நேற்று முதல் டெல்லியில் மதுக் கடைகள் திறக்கப்பட்டு உள்ளதை அடுத்து மதுபாட்டில்களை வாங்க ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் கூடி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதனையடுத்து இன்று மதுவிற்பனையில் முதல் புதிய முறை அமலுக்கு வரும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.. இதன்படி ஸ்பெஷல் கொரோனா வரியாக மதுபாட்டில் ஒன்றின் மீது 70 சதவீதம் வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
மது பாட்டில்களின் எம்.ஆர்.பி விலையில் இருந்து 70 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் மது விலை கிட்டத்தட்ட இருமடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த விலை உயர்வு காரணமாக வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்