கொச்சியில் கரை ஒதுங்கிய 700 தமிழக மீனவர்கள்: தமிழக திரும்ப நடவடிக்கை தேவை

கொச்சியில் கரை ஒதுங்கிய 700 தமிழக மீனவர்கள்: தமிழக திரும்ப நடவடிக்கை தேவை

ஏற்கனவே ஓகி புயலால் காணாமல் போன மீனவர்கள் சிலரின் கதி என்னவென்றே தெரியாமல் போன நிலையில் தற்போது சமீபத்தியல் புயலிலும் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் கர்நாடகாவில் கரை ஒதுங்கியதாகவும், அவர்கள் சுமார் 700 பேர்கள் இருப்பதாகவும், கர்நாடகாவில் கரை ஒதுங்கிய அவர்களுக்கு உணவு, டீசல் வசதியில்லாததால் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள், சுமார் 700-க்கும் மேற்பட்டோர், கடந்த 9 நாட்களுக்கு முன்பு, கேரளாவின் கொச்சி பகுதியில் இருந்து, ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இந்த நிலையில், புயல் எச்சரிக்கை காரணமாக, அவர்கள் அனைவரும், கர்நாடக மாநிலம் கார்வார் துறைமுகத்தில் கரை ஒதுங்கியுள்ளனர். தற்போது, இந்த 700 மீனவர்களும் உணவு மற்றும் டீசல் வசதி இல்லாமல், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த மீனவர்கள் தமிழகம் திரும்ப உடனடியாக தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply