பிரான்ஸ் நாட்டில் 7000 வருடத்திற்கு முந்தைய எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
பிரான்ஸ் நாட்டின் அகழ்வாராய்ச்சி ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் மிகவும் பழமையான எலும்புக்கூடு ஒன்றை கண்டுபிடித்தனர். சுமார் 20 முதல் 50 வயது மதிக்கத்தக்க ஆண் எலும்புக்கூட்டை ஆராய்ந்தபோது அதன் வயது சுமார் 7000 ஆண்டுகள் இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
மேலும் அந்த எலும்புக்கூட்டின் உடையில் கூம்பு வடிவ குண்டுகளும், மான்களும் பற்களும் இருப்பது தெரியவந்துள்ளது. சுமார் 165 செமீ உயரமுள்ள அந்த எலும்புக்கூடு கிமு 4950 முதல் 4800 ஆண்டுகளில் வாழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறத்.
மேலும் இந்த எலும்புக்கூடு குறித்து ஆராய்ச்சி செய்து வருவதாகவும், இன்னும் பல அரிய உண்மைகள் இதன்மூலம் கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்,.