70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை

70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழக அரசு ஆணை

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுகுறித்து தமிழக சட்டப்பேரவையில் சமீபத்தில் முதல்வர் அறிவித்தார் என்பது தெரிந்ததே.

இதனையடுத்து அனைத்து அரசு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு ஸ்மார்ட் கார்டு தொடர்பாக அரசாணை சற்றுமுன் வெளியானது. இதன்படி 70,59,982 மாணவ, மாணவிகளுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்

இந்த ஸ்மார்ட் கார்டை இலவச பஸ் பயணம் உள்ளிட்ட பல்வேறு பயன்பாட்டுக்கு மாணவ, மாணவியர் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்மார்ட் கார்டு இல்லாத மாணவ மாணையர்களையும் மாநகர போக்குவரத்துக்கழகம் பேருந்தில் ஏற்ற மறுக்கக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் கல்லூரி மாணவர்கள் அடையாள அட்டையை காண்பித்தாலும் ஏற்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply