சசிகலா அபராதத்தை கட்டத்தவறினால் என்ன ஆகும்? சிறை அதிகாரி தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவுக்கும் இளவரசி மற்றும் சுதாகரனுக்கு சுப்ரீம் கோர்ட் 4 வருட சிறைத்தண்டனையும், தலா ரூ.10 கோடி அபராதத்தை தொகையையும் விதித்து தீர்ப்பு அளித்தது.
இந்நிலையில் அபாரதத்தொகை ரூ.10 கோடியை சசிகலா இன்னும் கட்டவில்லை என தெரிகிறது. இதுகுறித்து பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையின் முதன்மை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் கூறுறியதாவது:
குற்றவியல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ள சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறையில் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படவில்லை. மகளிர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, இளவரசிக்கும், ஆண் கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுதாகரனுக்கும் வெள்ளைச் சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. உச்சநீதிமன்ற உத்தரவின்படி மூவரும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிப்பதுடன், தலா ரூ.10 கோடி அபராதத்தையும் செலுத்த வேண்டும்.
ஒருவேளை சசிகலா, இளவரசி உள்ளிட்டோர் இந்த அபராத தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக ஓர் ஆண்டு சிறைத் தண்டனை அனுபவிக்க நேரிடும். மேலும் அதற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டியிருக்கும்’ என்று கூறினார்.