72 புதிய இமோஜிகள் அறிமுகம்
இமோஜி எனப்படும் உருவ எழுத்துக்களை இணைய உரையாடலில் பகிர்ந்துகொள்ளும் பழக்கம் கொண்டவர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக, 72 புதிய இமோஜிகள் அறிமுகமாக உள்ளன.
எழுத்துருக்களைத் தர நிர்ணயம் செய்யும் யூனிகோடு கூட்டமைப்பு தான் இமோஜிகளையும் அங்கீகரிக்கிறது. புதிய இமோஜிகளுக்கான கருத்தாக்கம் இந்த அமைப்பிடம் சமர்பிக்கப்பட்டு, பரிசிலிக்கப்பட்ட பிறகே ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
அல்லது நிராகரிக்கப்படுகின்றன. அந்த வகையில் இந்த அமைப்பு 72 வகையான புதிய இமோஜிகளுக்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளது. கெளபாய் தொப்பி, வாடிப்போன முகம், கர்ப்பிணிப் பெண், நடனமாடும் மனிதர் ஆகிய இமோஜிகளுடன் கோமாளி உருவம் மற்றும் செல்பி எடுப்பதைக் குறிக்கும் இமோஜிகளும் அறிமுகமாக உள்ளன.
குத்துச்சண்டை உறை, கொரில்லா, வெள்ளரிக்காய், கேரட், ஸ்கூட்டர் முதல் இடக் குறியீடு என இந்தப் பட்டியல் நீள்கிறது