காதலால் கைவிட்டு போன பட்டப்பிடிப்பு! 72 வயதில் கனவை நனவாக்கிய முதிய பெண்
அமெரிக்கவைச் சேர்ந்த 72 வயது முதிய பெண் ஒருவர் தனது 72 வயதில் பட்டம் பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அமெரக்காவைச் சேர்ந்தவர் டார்லீன் மல்லின்ஸ் என்ற முதிய பெண்ணுக்கு வயது 72 ஆகிறது. இவர் 1962 -ல் டென்னஸீ ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் பட்ட படிப்பு படித்து வந்தார். ஆனால் அந்த சமயத்தில் அவருடைய பல்கலைக்கழகத்தில் படித்த ஜான் மல்லின்ஸ் என்பவரை டார்லீன் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ததால் படிப்பிற்கு மூட்டை கட்டி விட்டு குடும்பம், குழந்தைகளை கவனிப்பதில் அக்கறை செலுத்தினார்.
இந்த நிலையில் பல வருடங்களுக்குப் பிறகு விட்டுப் போன படிப்பை 2013இல் டார்லீன் மீண்டும் தொடங்கினார். தற்போது டார்லீன் ஆப்ரிகன் ஸ்டடிஸ் மற்றும் தொடர்பியல் துறையில் தேர்ச்சி பெற்று கவுரவப் பட்டம் பெற்றுள்ளார்.