730 நாட்கள் சம்பளத்துடன் விடுமுறை. இம்ரான்கான் அரசுக்கு முதல் அதிர்ச்சி
பாகிஸ்தானில் சமீபத்தில் இம்ரான்கான் பிரதமர் பதவியேற்றதில் இருந்தே பல அதிரடி நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் புதிய ரயில்வே அமைச்சர் மீது கடும் அதிருப்தி அடைந்துள்ள அத்துறை உயர் அதிகாரி ஒருவர் 730 நாட்களுக்கு விடுமுறை அளிக்கும்படி கேட்டு கொண்டுள்ளார்.
பாகிஸ்தானில் இம்ரான்கான் தலைமையிலான அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராக ேஷக் ரஷீத் என்பவர் பொறுப்பேற்றுள்ளார். ரயில்வே துறையில் தலைமை வர்த்தக மேலாளராக பணியாற்றும் முகமது அனீப் குல் திடீரென 730 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளார். அவர் தனது கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புதிய ரயில்வே அமைச்சரின் நடவடிக்கை வேலை தெரியாதவர் போல இருக்கிறது; மரியாதையற்ற வகையிலும் காணப்படுகிறது. எனவே, ஒரு அரசு ஊழியராக அவருடன் பணியாற்ற முடியாது. எனக்கு 730 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்று அவர் தனது விடுமுறை விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.