74 வயது பாட்டிக்கு இரட்டை குழந்தை: மருத்துவர்கள் கண்டனம்!
சமீபத்தில் 74 வயது முதிய பெண் ஒருவருக்கு இரட்டை குழந்தை பிறந்து சாதனை செய்யப்பட்டது என்ற செய்தி அனைவருக்கும் தெரிந்திருக்கும். ஆனால் மருத்துவ உலகின் இந்த சாதனைக்கு பல மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
74வயதில் செயற்கை கரூவூட்டல் முறையில் ஒரு குழந்தையை பிறக்க வைப்பது தாய், குழந்தை இருவருக்குமே ரிஸ்க்கான செயல் என்றும், தாயின் வயதையும் அவர்களது ஆயுட்காலத்தையும் கணக்கிட்டு பார்க்கும்போது குழந்தையின் நிலை என்ன என்பதை யோசிக்காமல் அறிவியலை தவறாக பயன்படுத்துவதாகும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
உண்மையில் இந்த செயற்கை கருவூட்டல் என்பது திருமணமாகி குறைந்தது பத்து வருடங்கள் குழந்தை இல்லாத பெண்களுக்கு உரிய அம்சம் என்றும் அதாவது 45வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு செயற்கை முறையில் கருவூட்டுதல் கூடாது என்பதி விதி என்றும் ஆனால் இதனை சட்டம் ஆக்காததால் இதுபோன்ற விபரீதங்கள் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர்