75% இந்திய இளைஞர்கள் குடிகாரர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை

75% இந்திய இளைஞர்கள் குடிகாரர்கள்: அதிர்ச்சி அளிக்கும் ஆய்வறிக்கை

இந்தியாவில் 25 வயதை தொடுவதற்குள்‌ 75 சதவீத இளைஞர்கள்‌ குடிப்பழக்கத்துக்கு ஆளாவதாக சமீபத்தில்‌ எடுக்கப்பட்‌ட ஆய்வில்‌ தெரிய வந்துள்ளது. தென்‌ மும்பை தோபிதலாவில்‌ உள்ள செயின்ட்‌ சேவியர்ஸ்‌ கல்லூரியின்‌ முதலாமாண்டு மாணவர்கள்‌, அந்த கல்லூரியின்‌ வரலாற்றுத்துறை தலைவர்‌ டாக்டர்‌ அவ்கேஷ்‌ ஜாதவ்‌ வழிகாட்டுதலின்‌ பேரில்‌ சமீபத்தில்‌ ஒரு ஆய்வை மேற்கொண்டனர்‌.

மும்பை, டெல்லி, கொல்கத்தா நகரங்களிலும்‌ ராஜஸ்தான்‌ மாநிலத்‌திலும்‌ மட்டுமல்லாது செக்‌ குடியரசு நாட்டின்‌ தலைநகர்‌ பிராகுவே, ஹங்‌கேரி நாட்டு இளைஞர்களிடமும்‌ இந்த ஆய்வு மேற்கொள்ளப்‌பட்டது. 16 முதல்‌ 21 வயதுக்குட்பட்ட சுமார்‌ 1,000 இளைஞர்களிடம்‌ இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வில் 21 வயதுக்கு முன்பாகவே மது அருந்த தொடங்கியதாக சுமார் 75% பேர் தெரிவித்துள்ளனர். மேலும் 88 சதவீதம்‌ பேர்‌ வேறு வகையான சில் போதை பொருட்களை பயன்படுத்த முயற்சித்ததாகவும்‌ அந்த ஆய்வறிக்‌கையில்‌ கூறப்பட்டுள்ளது. ஒருவிதமான எதிர்பார்ப்பு, மன அழுத்தம்,‌ போதை பொருள்கள்‌ எளிதாக கிடைப்பது போன்ற காரணங்களால்‌, மது உள்ளிட்ட போதைப்‌ பழக்கத்துக்கு இளைஞர்கள்‌ ஆளாகி விடுவதாக அந்த ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

Leave a Reply