மலேசிய பிரதமரை வாட்ஸ் அப்பில் கேலி செய்த முதியவருக்கு சிறைத்தண்டனை

மலேசிய பிரதமரை வாட்ஸ் அப்பில் கேலி செய்த முதியவருக்கு சிறைத்தண்டனை

whatsapp_2215218fமலேசிய பிரதமர் நஜிப் ரஷாக் அவர்களின் உருவத்தை மிகவும் கோரமாக வாட்ஸ் அப்பில் பதிவு செய்த 76 வயது முதியவரை போலீசார் கைது செய்தனர். அவரது குற்றம் உறுதி செய்யப்பட்டால் அவருக்கு 50 ஆயிரம் மலேசிய ரிங்கிட் அபராதமும் அல்லது ஒரு ஆண்டு சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

மலேசியாவை சேர்ந்த 76வயது முதியவர் பாயா என்பவர் வாட்ஸ் அப்பில் அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்பவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த வாரம் பிரதமர் புகைப்படத்தை போட்டோஷாப்பில் மிகவும் கொடூரமாக மாற்றி அதை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தை அவர் வாட்ஸ் அப்பில் பலருக்கு ஷேர் செய்துள்ளார்.

இந்த புகைப்படம் குறித்து தொடர்ந்து புகார் வந்த நிலையில் போலீசார் திவீர விசாரணை செய்து பாயாவை கைது செய்தனர். இதுகுறித்து மலேசிய உயர் போலீஸ் அதிகாரி அஹ்மது கூறியதாவ்து, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையோ, புகைப்படங்களையோ பதிவு செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்டியுள்ளார்.

Leave a Reply