7 வது ஐ.பி.எல் போட்டிகள் அரபு நாடுகளுக்கு மாற்றமா?

இந்தியாவில் நடக்க இருந்த ஏழாவது ஐ.பி.எல். போட்டிகள் பாராளுமன்ற தேர்தல் காரணமாக அபுதாபி, துபாய் , ஷார்ஜா ஆகிய இடங்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் 7வது ஐ.பி.எல் போட்டிகள் நடக்க இருக்கின்றன. அதே நேரத்தில் பாராளுமன்ற தேர்தலும் நடக்க இருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு நாட்டிற்கு மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. கடந்த 2009 ஆம் ஆண்டும் இதே காரணத்திற்காக அப்போதைய ஐ.பி.எல் போட்டிகள் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது.

அதேபோல் இந்த வருடம் நடக்க இருக்கும் போட்டிகளை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நாடுகளில் நடத்த ஐ.பி.எல் நிர்வாகம் ஆலோசனை செய்து வருகிறது. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் மட்டும் இந்தியாவில் நடத்தப்படலாம் என தெரிகிறது.

Leave a Reply