8ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் சம்பளத்தில் வேலை!
சென்னையில் செயல்பட்டு வரும் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் ஓட்டுநர் பணியிடம் காலியாக உள்ளது. இதனை நிரப்ப அறிவிப்பு ஒன்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், கனரக வாகனம் ஓட்டும் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பணி குறித்த முக்கிய தகவல்கள்
நிர்வாகம் : அரசு தாய் சேய் நல மருத்துவமனை, சென்னை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : ஓட்டுநர்
கல்வி: குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கூடுதல் தகுதி: கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் கனரக வாகனம் ஓட்டிய அனுபவம் அவசியம்.
வயது வரம்பு : 18 முதல் 32 வரை
சம்பளம்: மாதம் ரூ.19,500 முதல் ரூ.62,000 வரை
மேற்கண்ட தகுதிகள் உள்ளவர்கள், சென்னை எழும்பூரில் உள்ள அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் விண்ணப்பம் பெற்று, அதனை பூர்த்தி செய்து, ஜனவரி 9 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் ஜனவரி 6 முதல் 8 ஆம் தேதியில் வரை வழங்கப்படும்