8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கலையரசி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி: ஜனவரி 2017-இல் நடைபெறவுள்ள 8-ஆம் வகுப்பு பொதுத் தேர்வினை 1.1.2017 அன்று பனிரெண்டரை வயது நிறைவடைந்த தனித்தேர்வர்கள் எழுதலாம். இந்த தேர்வுக்கு நவ.25-ஆம் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாள்களில் www.dge.tn.giv.in என்ற இணையதளத்தில் குறிப்பிட்டுள்ள சேவை மையங்களுக்கு சென்று விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணம் ரூ.125, இணையதள பதிவுக் கட்டணம் ரூ.50 என மொத்தம் ரூ.175-ஐ ரொக்கமாக சேவை மையங்களில் நேரடியாக செலுத்தலாம். விண்ணப்பத்துடன் தங்களது பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், பதிவுத்தாள் நகல், பிறப்புச் சான்றிதழ் நகல் இவற்றில் ஏதேனும் ஒன்றை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கெனவே தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களையும் கண்டிப்பாக இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
இணையதளம் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். தபால் மூலம் பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். இந்தத் தேர்வுக்கான விரிவான தகவல்களை ஜ்ஜ்ஜ்.க்ஞ்ங்.ற்ய்.ஞ்ர்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் காணலாம் எனத் தெரிவித்தார்.