8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்

8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் 80 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ஏன்? ரோஹித் சர்மா விளக்கம்

நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து மோசமான சாதனையை நிகழ்த்தியது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா, ‘பேட்டிங், பீல்டிங், பவுலிங் என மூன்று துறைகளிலும் நாங்கள் முறையாக செயல்படவில்லை. 200 ரன்களுக்கு மேல் ரன்சேஸ் செய்வது எளிதானதல்ல என்பதை நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்தோம். ஆனால் சரியான தொடக்கம் அமையாததாலும், சரியான பார்ட்னா்ஷிப் இல்லாததாலும் இலக்கை அடையமுடியவில்லை. அணியில் 8 பேட்ஸ்மேன்களை வைத்திருந்தும் வெற்றி பெற முடியாதது வருத்தம்” என்று கூறினார்.

இரு அணிகளுக்கான அடுத்த போட்டி பிப்ரவரி 8ஆம் தேதி ஆக்லாந்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்தியா வென்று பழிதீர்க்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

இந்தியா, நியூசிலாந்து, டி20, ரோஹித் சர்மா

Leave a Reply