8 லட்சத்து 63 ஆயிரம் கோடி செலவு செய்தும் நினைத்தது நடக்கவில்லை. தென்கொரிய அரசு திணறல்
தென்கொரிய நாட்டில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு 8 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயு செலவு செய்தும் எதிர்பார்த்த பிறப்பு விகிதம் அதிகரிக்கவில்லை என கூறப்படுகிறது.
உலகில் பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த நாடாக கருதப்படும் தென் கொரியாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்க அரசு முயற்சித்து வருகிறது. இதற்காக தற்போது 7 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் அனைத்து மருத்துவ செலவையும் அரசே ஏற்கவுள்ளது.
கடந்த ஆண்டு 8 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளின் பெற்றோருக்கு மகப்பேறு விடுமுறையை அறிமுகப்படுத்திய அரசு, குழந்தை பராமரிப்பு மானியத்தையும் அதிகரித்தது.
கடந்த 2005 ஆம் ஆண்டு முதல் 8 லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாயை அரசு செலவழித்து பிறப்பு விகித்தை அதிகரிக்க தென் கொரிய அரசு போராடி வருகிறது.