8 வழிச்சாலை திட்டத்தை சென்னை – மதுரை இடையே மாற்ற வேண்டும்: கே.எஸ்.அழகிரி
போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ளதால் 8 வழிச்சாலை திட்டத்தை சென்னை – மதுரை இடையே மாற்ற வேண்டும் என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
சென்னை – சேலம் வழித்தடத்தில் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கான தேவை இல்லை என்றும், அதற்கு பதிலாக சென்னை – மதுரை இடையே மாற்ற வேண்டும் என்றும் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
ஆனால் சென்னை – மதுரை 8 வழிச்சாலை திட்டம் கொண்டு வந்தாலும், அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று கூறப்ப்டுகிறது