போதை மருந்து கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஈழத்தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 8 பேர் நேற்று துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டு மரண தண்டனைக்கு ஆளானார்கள். இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு சமமாம போதை மருந்து கடத்தும் குற்றம் கருதப்படுகிறது. இந்த குற்றத்தை செய்தவர்கள் அந்நாட்டு சட்டப்படி மரண தண்டனைக்கு ஆளாவார்கள்.
இந்நிலையில் கடந்த 2005ஆம் ஆண்டு 8.3 கிலோ ஹெராயின் போதைப்பொருளை ஆஸ்திரேலியாவுக்கு கடத்த முயன்றதாக இலங்கை தமிழர் மயூரன் சுகுமாறன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது போதை மருந்து தடை சட்டத்தின் பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு நீதிமன்றம் மயூரன் சுகுமாறன் மற்றும் ஆண்ட்ரூ சான் ஆகிய இருவருக்கும் மரண தண்டனையும், மற்றவர்களுக்கு ஆயுள் தண்டனையும் விதித்தது.
ஆஸ்திரேலியா குடியுரிமை பெற்றுள்ள மயூரன் சுகுமாறனை காப்பாற்ற ஆஸ்திரேலிய அரசு செய்த அனைத்து முயற்சிகளும் தோல்வியில் முடிய மயூரன் சுகுமாறன், ஆண்ட்ரூ சான் மற்றும் பல்வேறு வழக்குகளில் மரண தண்டனைக்கு உள்ளானவர்கள் என மொத்தம் 8 பேர்களது மரண தண்டனையை நேற்று நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதன்படி மயூரன் சுகுமாறான் உள்பட மரண தண்டனை பெற்ற 8 பேர்களும் துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். பின்னர் அவர்களது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மயூரன் சுகுமாறனின் உடலை பார்த்து அவரது உறவினர்கள் கதறியழுத காட்சி கல்நெஞ்சையும் கறைய வைப்பதாக இருந்தது.