2 கைகளிலும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட உலகின் மிக இளவயது சிறுவன்
[carousel ids=”68970,68971,68972,68973,68974″]
உலகிலேயே மிக இளவயதில் இரண்டு கைகளுக்கும் மாற்று அறுவை சிகிச்சை எட்டு வயது சிறுவனுக்கு வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஃபிலடெல்பியா என்ற நகரில் ஜியான் ஹார்வே என்ற சிறுவனுக்கு இரண்டு வயதாக இருக்கும்போது ஏற்பட்ட ஒரு வைரஸ் நோயின் பாதிப்பால் அவனுடைய இரண்டு கைகளும் எடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஆறு வருடங்கள் இரண்டு கைகளுமே இல்லாத நிலையில் வாழ்ந்து வந்த அந்த சிறுவனுக்கு கடந்த வாரம் கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
ஃபிலடெல்பியாவுள்ள குழந்தைகள் மருத்துவமனையில் 40 மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்று சுமார் 11 மணி நேரம் தொடர்ந்து செய்த அறுவை சிகிச்சையின் மூலம் தற்போது அந்த சிறுவனுக்கு இரண்டு கைகளும் செயல்படுகிறது.
தற்போது சிறுவன் தன்னுடைய இரண்டு கைகளாலும் சின்ன சின்ன பொருட்களை தூக்கி பயிற்சி பெற்று வருகிறார். உலகிலேயே மிக இளவயதில் இரண்டு கைகளும் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்ட சிறுவன் என்ற பெருமை இந்த சிறுவனுக்கு கிடைத்துள்ளது.