ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்த 80 வயது முதியவர். அதிர்ச்சியில் உலக நாடுகள்

[carousel ids=”65142,65141,65140,65139,65138,65137″]

ஈராக், மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு, இளைஞர்களையும் சிறுவர்களையும் பெண்களையும் தமது அமைப்பில் சேர்க்க மூளைச்சலவை செய்து வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த அமைப்பில் சமீபத்தில் 80 வயதான ஒருவர் சேர்ந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இவர்தான் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மிக வயதான ஜிதாதி என்று அழைக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

80 வயதான முகமது அமீன் என்பவர் தனது குடும்பத்தை விட்டு பிரிந்து ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சமீபத்தில் சேர்ந்துள்ளார். இவருடைய மகன் சிரியாவில் ராணுவத்தினர்களால் கொல்லப்பட்டதை அடுத்து இவர் ஐ.எஸ்.ஐ.எஸ்  இயக்கத்தில் சேர்ந்துள்ளதாக வீடியோ பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்துள்ளார். வடமேற்கு சீனாவை சேர்ந்த இவர் கடந்த சில ஆண்டுகளாக துர்கெஸ்தான் பகுதியில் வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

ஏகே 47 துப்பாக்கியை உபயோகிப்பது எப்படி என்ற பயிற்சியை தற்போது பெற்று வருவதாகவும், விரைவில் தனது குழுவினர்களுடன் போரில் குதிக்க உள்ளதாகவும் மேலும் அவர் தன்னுடைய பேட்டியில் தெரிவித்துள்ளார். இளைஞர்கள் மட்டுமின்றி முதியவர்களும் ஐ.எஸ்.ஐ.எஸ்  அமைப்பில் சேர்ந்து வருவதால் ஈராக், சிரியா மட்டுமின்றி உலக நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

Leave a Reply