47வது முறையாக 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த 82 வயது முதியவர்

47வது முறையாக 10ஆம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்த 82 வயது முதியவர்
10th
பொதுவாக பத்தாம் வகுப்பு தேர்வில் தோல்வி அடைந்தவர்கள் அடுத்த ஆண்டோ அல்லது ஒருசில ஆண்டுகளிலோ தேர்ச்சி பெறுவார்கள். அல்லது படிப்பை நிறுத்திவிடுவார்கள் என்றுதான் இதுவரை நாம் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் ராஜஸ்தானை சேர்ந்த ஒருவர் தொடரந்து 46 ஆண்டுகளாக பத்தாம் வகுப்பு தேர்வை எழுதியுள்ளதாகவும் 47வது முறையாக இந்த வருடம் அவர் எழுதிய தேர்விலும் தோல்வி அடைந்ததாகவும் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூர் மாவட்டத்தில் உள்ள கோஹாரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் என்ற 82 வயது முதியவர் இதுவரை திருமணம் ஆகாமல் பிரம்மச்சாரியாகவே உள்ளார். பத்தாம் வகுப்பில் பாஸ் செய்தால்தான் திருமணம் என்ற கொள்கையுடன் வாழ்ந்து வரும் இவர் 82 வயது ஆகியும் அவரால் பாஸ் செய்ய முடியவில்லை. தொடர்ந்து அவர் கணக்கு தேர்வில்தான் தோல்வி அடைந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 1969ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 47 ஆண்டுகளாக தனித்தேர்வு எழுதி, இந்த ஆண்டும் தேர்விலும் தோல்வி அடைந்த அவர் சில ஆண்டுகளில் கணிதத்தில் ஒரு மார்க் கூட எடுக்காமல் சைபர் மார்க் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இனி அடுத்த ஆண்டும் தேர்வு எழுதவுள்ளதாகவும் பத்தாம் வகுப்பை பாஸ் செய்யாமல் விடப்போவதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply