84 திட்டங்களில் 33 கோடி பேர் நேரடியாக பயன்: தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி அறிவிப்பு
மத்திய அரசின் நேரடி பண பரிமாற் றத் திட்டத்தின்கீழ் (டிபிடி) இது வரை 33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். மத்திய அரசின் 84 திட் டங்களின் மூலம் இவர்கள் பய னடைந்துள்ளதாக மக்களவையில் மத்திய மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் பிபி சவுத்ரி தெரிவித்தார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை 33.52 கோடி பயனாளிகள் மத்திய அரசின் 84 திட்டங்களின் கீழ் பயன் அடைந்துள்ளனர். நேரடி பண பரிமாற்ற (டிபிடி) கண்காணிப்புக் குழு இத்தகவலை திரட்டியுள்ளதாக கூறினார். பாரத் கோஷ், பிஎப்எம்எஸ் உள்ளிட்ட மின்னணு பரிவர்த்தனை மூலம் இப்பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது.
அனைத்து அரசுத் துறைகளிலும் மின்னணு பண பரிவர்த்தனையை அனுமதிக்கும்படி அறிவுறுத்தப் பட்டுள்ளதாகவும், மிகவும் தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே ரொக்க பணம் ஏற்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2ஜி சேவை
தொலைத் தொடர்பு நிறுவனங் களான ஏர்செல், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஏர்டெல் ஆகியவற்றின் 2 ஜி சேவை டிராய் சேவை அளவைக் காட்டிலும் குறைவாக உள்ளது. இத்தகவலை மக்களவையில் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் மனோஜ் சின்ஹா தெரிவித்தார்.
ஏர்செல் நிறுவனம் லைசென்ஸ் பெற்றுள்ள 27 வட்டாரங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கேற்ப 2ஜி சேவையை அளிக்கவில்லை. ரிலையன்ஸ் நிறுவனம் 25 பிராந்தியங்களிலும், ஏர்டெல் நிறுவனம் 15 வட்டாரங்களிலும் இத்தகைய சேவையை அளிக்க அனுமதி பெற்றுள்ளன.
தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கும் சேவையின் தரத்தை தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் தெரிவித்தார்.
மத்திய அரசு நிறுவனமான எம்டிஎன்எல் 2 ஜி சேவைக்காக லைசென்ஸ் பெற்ற 25 பிராந்தியங்களில் ஒரே ஒரு இடத்தைத் தவிர அனைத்துப் பகுதிகளிலும் நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி சேவை அளிப்பதாக சின்ஹா சுட்டிக் காட்டினார். இதேபோல பிஎஸ்என்எல் நிறுவனமும் மேற்கு வங்கம் தவிர பிற பகுதிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவின் படி சேவையைத் தொடர்வதாக அவர் கூறினார்.
புதிதாக களமிறங்கியுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் 94 சதவீதம் பேர் நகர்ப்புறத்தினர் என்றும் ஏர்டெல் நிறுவனத்தில் இது 50.88 சதவீதமாகவும், வோடபோனில் 46.29 சதவீதமாகவும், ஐடியா-வில் 45.23 சதவீதமாகவும் உள்ளதாக அவர் கூறினார்.
இன்னமும் 55 ஆயிரம் கிராமங் கள் மொபைல் தொடர்பு வரம் புக்குள் இணைக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
நபார்டு-க்கு மசோதா
வேளாண் வங்கியான நபார்டு ரூ. 30 ஆயிரம் கோடி மூலதனம் திரட்ட அனுமதிக்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. தேசிய வேளாண் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு மசோதா 2017-ஐ மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்தார். இந்த மசோதாவின்படி ரூ. 5 ஆயிரம் கோடி மூலதனம் திரட்டுவது என்றிருந்த வரம்பு ரூ. 30 ஆயிரம் கோடியாக உயர்த்த வழி வகுக்கப்பட்டுள்ளது