84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த பிரபல பத்திரிகையாளர்
காதலுக்கு வயது தேவையில்லை என்றும் காதலுக்கு கண்ணில்லை என்றும் கூறுவதுண்டு. அதை நிரூபிப்பதுபோல் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் ஒருவருக்கு 84வயதில் காதல் வந்துள்ளது. அதுவும் 59வயது பெண் ஒருவருடன்
இங்கிலாந்து நாட்டின் பிரபல பத்திரிகையாளர் ரூபெர்ட் முர்டோக் என்பவருக்கு தற்போது 84 வயது ஆகிறது. ஏற்கனவே 3 பெண்களை திருமணம் செய்து மூவரையும் விவாகரத்து செய்த ரூபெர்ட் தற்போது நான்காவதாக 59 வயது ஜெர்ரி ஹால் என்றா முன்னாள் மாடல் அழகியை திருமணம் செய்துள்ளார்.
மாடல் அழகி ஜெர்ரி ஹாலுக்கு ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1999ஆம் ஆண்டே கணவரை விவாகரத்து செய்துவிட்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த ஜெர்ரிக்கு திடீரென 84வயது பத்திரிகையாளர் மீது எப்படி காதல் வந்தது என்றே தெரியவில்லை.
இருவரும் தொழில்முறையாக சிலகாலம் பழகிவந்த நிலையில் இருவருக்கும் இடையே திடீரென காதல் தோன்றியதாகவும் இதையடுத்து இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று லண்டனில் பிளீட் தெருவில் உள்ள செயின்ட் பிரைட்ஸ் கிறிஸ்தவ தேவாலயத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் வெகுவிமரிசையாக முடிந்தது.
திருமணமான இந்த தம்பதிகள் அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவுக்கு ஹனிமூன் செல்லவுள்ளாரகளாம்.
Chennai Today News: 84-year-old media mogul Rupert Murdoch celebrates 4th marriage